Home /madurai /

நகர விவசாயிகளுக்கு கைகொடுக்கும் மதுரை நர்சரி..

நகர விவசாயிகளுக்கு கைகொடுக்கும் மதுரை நர்சரி..

மதுரை

மதுரை நர்சரி..

Madurai Nursery | இன்றைய நகர வாழ்கையில் பலரும் இயற்கை வாழ்வியலை மறந்து செயற்கையான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் அதனை மாற்றும் பொருட்டு மதுரையில் இயங்கி வருகிறது இந்த மீனா விதை மற்றும் மரக்கன்றுகள் விற்பனை நிலையம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
இன்றைய நவநாகரீக வாழ்கையில் சென்னை, மதுரை போன்ற பெருநகர் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் செயற்கை உணவுகள், முறையற்ற வாழ்கை என உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில். இவ்வாறு வாழும் மக்கள் அனைவரையும் இயற்கை வாழ்வியல் முறைக்கு மாற்றும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் கிடைக்கும் பல வகையான காய்கறிகள், பழங்களின் விதைகளை விற்பனை செய்து வருகிறது மதுரையிலுள்ள பழ விதை பண்ணை ஒன்று..

நகர் கலாச்சாரத்தில் இயற்கை வாழ்கை, தோட்ட வளர்ப்பு, விவசாயம், தற்சார்பு உணவு உற்பத்தி சாத்தியமா  என்று கேட்டால் அது முற்றிலும் சாத்தியமே..

நகரங்களில் மரங்கள் மற்றும் செடிகள் வளர்ப்பதற்கு நேரம் இல்லை என்ற காலம் படிப்படியாக மாறி இன்று பலரும் தங்களது மொட்டை மாடிகளிலும், வீட்டின் பின்புற நிலங்களிலும் தோட்டம் வைத்து தங்களுக்கு தேவையான உணவினை தாங்களே விளைவித்து அதனை அறுவடை செய்து வருகின்றனர்.

இவ்வாறு மதுரையிலும் பலர் வீட்டில் தோட்டம் வைத்து வளர்த்து வருகின்றனர் ஆனால் இதன் முக்கியத்துவத்தை பலரும் இன்றும் அறியாமலேயே உள்ளனர்.

இது குறித்து மீனா நர்சரி கார்டன் உரிமையாளர் திரு.பூமிராஜன் அவர்கள் கூறுகையில்,  “நகர் பகுதிகளில் என்னை போன்று பலரும் காய்கறி மற்றும் பழங்களின் விதைகளை விற்பனை செய்து வருகிறோம், மக்களுக்கு இயற்கையான வாழ்கை வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளபோதும் அதற்கான உரிய நேரத்தை அவர்கள் ஒதுக்குவதில்லை, மதுரை நகர மக்கள் செடி, மரங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அவைகள் மதுரையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஆகவே அதையே ஒரு காரணமாக வைத்து யாரும் தங்களது வீட்டில் மரமோ, செடியோ வளர்ப்பதில்லை.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே தான்  விதைகள் விற்பனை நிலையத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் விவசாயம், தற்சார்பு வாழ்கையை பின்பற்றுவதற்கு இவரது இந்த விதைகள் விற்பனை நிலையமானது பெரிதும் உதவிகரமாக உள்ளது. இங்கு பல்வேறு வகையான பழ மரங்களின் விதைகள், நாற்றுகள் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனை எப்படி பயிரிட வேண்டும், எப்படி பராமரித்து வர வேண்டும், என்ன வகையான ஊட்டச்சத்துகள் தர வேண்டும் என்பது வரை இங்கே ஆலோசனைகளும் தரப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை உயர்நீதிமன்றம் பின்புறம் இந்த மீனா நர்சரி கார்டன் விதைகள் விற்பனை நிலையமானது அமைந்துள்ளது.

தொடர்புக்கு : 9159761790,  9787841134

Meena nursery garden madurai
மீனா நர்சரி கார்டன், மதுரை
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி