முகப்பு /மதுரை /

வீட்டு வேலைகளை எளிதாக்கும் ஸ்மார்ட் பொருட்கள்.. ஆன்லைனில் அசத்தும் மதுரை பெண்!

வீட்டு வேலைகளை எளிதாக்கும் ஸ்மார்ட் பொருட்கள்.. ஆன்லைனில் அசத்தும் மதுரை பெண்!

X
மதுரை

மதுரை இளம்பெண்

Smart Kitchen Products | வீட்டை சுத்தமாக வைத்திருக்க தேவையான ஸ்மார்ட் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் மதுரையை சேர்ந்த பெண்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா. எம்பிஏ படித்து முடித்துவிட்டு சுய தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துதலில், ஆன்லைனில் ஒன்றரை வருடமாக வீட்டு வேலைகளை சுலபமாக்கிடும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

எம்பிஏ படிச்சதனால என்னவோ சுயதொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரவீனா மார்க்கெட்டில் இல்லாத வித்தியாசமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எண்ணி இதில் ஈடுபட்டு வருகிறார்.

பிரவீனா தற்பொழுது நான்கு வகையான பொருட்களை விற்பனை பண்ணிக்கிட்டு இருக்காங்க.நாம எப்பொழுதுமே வீட சுத்தமா வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம் அதற்கு ஏற்றார் போல் இவர் வைத்திருக்கும் ப்ராடக்ட் தான் ஆன்டி ஸ்லிப் மேட். இதன் பயன் என்னவென்றால் வீட்டு அலமாரிகள், கிட்சன் பொருட்களை அடுக்கி வைக்கிற இடம் மற்றும் துணிமணிகள் மடித்து வைக்கிற அலமாரிபோன்ற இடங்களில் நியூஸ் பேப்பரை பயன்படுத்தி இருப்போம் இதற்கு ஆல்டர்நேட்டிவ்வாக இந்த மேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் வீடு சுவர்களிலும் பேன்களிலும் ஜன்னல்களிலும் இருக்கும் தூசிகளை அகற்றுவதற்காக மைக்ரோ பைபர் டஸ்டர் என்ற ப்ராடக்ட்டையும், கிச்சனில் பயன்படுத்தப்படும் துணிகளுக்கு பதிலாக அதிகமாக தண்ணீரை உறிஞ்சிடும்ஸ்பாஞ்சையும், வீடுகளை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக குறிப்பாக முதியவர்களுக்காகவே‘broom வித் டஸ்ட்பின்’ என்ற பொருளையும் மதுரை மட்டுமல்லாதுதமிழ்நாடு முழுவதுமாகவேவிற்பனை செய்து கொண்டிருக்கிறார் பிரவீனா.

First published:

Tags: Jobs, Local News, Madurai