ஹோம் /மதுரை /

இந்த வீட்டுக்கு ஏசி தேவையில்லை.. மதுரையில் பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இயற்கை வீடு.. செலவு எவ்வளவு?

இந்த வீட்டுக்கு ஏசி தேவையில்லை.. மதுரையில் பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இயற்கை வீடு.. செலவு எவ்வளவு?

பாரம்பரிய

பாரம்பரிய வீடு, சூர்யா நகர் - மதுரை

Madurai Naturally Constructed House : மதுரை மாவட்டம் கே. புதூரில் விவேக் ராஜ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பாரம்பரிய முறையில் வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு ஏசியே தேவைப்படுவதில்லை.. எப்போதும் குளு குளுவென இருக்கும் இந்த வீடு குறித்து பல்வேறு விஷயங்களை தற்போது காணலாம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மாவட்டம் கே.புதூர் அடுத்துள்ள சூர்யா நகர் பகுதியில் வசிப்பவர் தான் விவேக் ராஜ், இவர் சொந்தமாக மதுரை தல்லாகுளத்தில் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீடு கட்டவேண்டும் என்ற முடிவிற்கு வந்தபோது மற்ற வீடுகளை போல் இல்லாமல் இயற்கை முறையில், இயற்கை மரபுகளை பின்பற்றி தனது வீட்டை கட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.  அதன்படி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல ஊர்களுக்கு சென்று நுட்பங்களை  பார்வையிட்டு தனக்கான வீட்டை கட்ட தொடங்கியுள்ளார்.

பாரம்பரிய வீடு, சூர்யா நகர்

பிற வீடுகளை போல் சிமெண்ட் கற்கள் கொண்டில்லாமல், தூண்கள் இல்லாமல் இந்த வீடானது அமைக்கப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்டு, சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்பட்டு, பெயிண்ட் எதுவும் அடிக்காமல் சுவர்கள் எழுப்பப்பட்டு, கண்ணாடிகளில் செய்யப்பட்ட ஜன்னல்கள் அல்லாது மரத்தால் செய்யப்பட்ட ஜன்னல்கள் இந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய வீடு, சூர்யா நகர்

பாரம்பரிய வீடு, சூர்யா நகர்

இது குறித்து வீட்டின் உரிமையாளர் விவேக் ராஜ் கூறுகையில் இந்த வீட்டிற்கு ஏ.சி தேவை இல்லை என்றும் கட்டப்பட்ட சுவர்கள் மூலமாக வெளியில் உள்ள வெப்ப நிலைக்கு ஏற்ப வீட்டின் தன்மையானது மாறுபடும். அதுமட்டுமல்லாமல் இந்த வீடு உடல் நலத்திற்கும் பாதுகாப்பானதாக அமையும் என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai