மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஆளும்கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.
மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஓட்டலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தலைவர் தான் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தலைவர். அத்தகைய அதிகாரம் மிக்கவரை புறக்கணித்து விட்டு பிரதமர் புதிய நாடாளுமன்றத்தை திறக்கிறார். புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் மே 28 அன்று துக்க நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்க உள்ளது. அன்றைய தினம் விசிக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய உள்ளோம்.
சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்காதவர். அரசமைப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானவர். பாசிச கொள்கையை மண்ணில் விதைத்தவர். அவரது பிறந்தநாளில் இது திறக்கப்படுவது உள்நோக்கம் கொண்டது.
தலைமை செயலகத்தையும் நாடாளுமன்றத்தையும் ஒன்றாக நிர்மலா சீதாராமன் ஒப்பீடு செய்வது சரியல்ல. தலைமை செயலகம் வேறு, நாடாளுமன்றம் வேறு. மத்திய அரசு அதன் தலைமை செயலகத்தை கட்டவில்லை. சட்டம் இயற்றும் நாடாளுமன்ற அவையை கட்டியுள்ளார்கள். எனவே அதை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.
செங்கோலில் மதம் சார்ந்த அடையாளம் இருந்தால் அது அரசமைப்புக்கு எதிரானது. அதில் நந்தி சிலை உள்ளது. எனவே அது அரசமைப்புக்கு எதிரானது. அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அரசமைப்பு சட்டத்தின் பக்கம் நிற்கிறோம்.
பூரண மதுவிலக்கு என்பது தான் விசிகவின் நிலைப்பாடு. திமுக தேர்தல் அறிக்கையிலும் அதை சொல்லியுள்ளது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்த விசிக திட்டமிட்டுள்ளது.
தோனியால் என் வாழ்க்கையே மாறியிருக்கிறது- மதுரை ’தோனி’ பாண்டி நெகிழ்ச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thirumavalavan