முகப்பு /மதுரை /

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் நிகழ்ச்சி..

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் நிகழ்ச்சி..

X
மதுரை

மதுரை ராஜா முத்தையா மன்றம்

Madurai Today News | மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற தமிழிசை சங்க நிகழ்ச்சியில் பாடல் மூலமாக திருக்குறளின் அறத்துப்பாலை அனைவரும் ஒன்றிணைந்து பாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில், தமிழிசை சங்கம் சார்பில் 46 ஆம் ஆண்டு தமிழிசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழிசை சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழிசை விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்நிலையில், திருக்குறளை போற்றும் வகையில் அறத்துப்பால் பாடல் மூலமாக ரேவதி ராகத்தில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சில் தேசியக் கொடியின் வண்ணம் போன்று பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற இசையுடன் ஒன்றாக இணைந்து பாடினர்.

முற்றோதல் நிகழ்ச்சி

திருக்குறளை பாடல் வழியாக கேட்பதற்கு மிகவும் ரசனை மிக்கதாக இருந்தாக இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Thirukkural