முகப்பு /மதுரை /

மதுரைக்கு புதிய கலெக்டர்.. 3வது முறையாக பெண் நியமனம்!

மதுரைக்கு புதிய கலெக்டர்.. 3வது முறையாக பெண் நியமனம்!

மதுரை ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா

மதுரை ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா

Madurai new collector | மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது பெண் கலெக்டராக எம்.எஸ். சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார். 

  • Last Updated :
  • Madurai, India

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த அனீஸ் சேகர் மாற்றப்பட்டு 30 வருடங்களுக்குப் பின்பு மூன்றாவது பெண் கலெக்டராக எம்.எஸ். சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கலெக்டராக பொறுப்பேற்ற அனிசேகர் மூன்றாவது ஆண்டு துவங்கிய நிலையில் மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு நல பணிகளை செய்துள்ளார். தற்பொழுது இவருக்கு பதிலாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பனம்பட்டியைச் சேர்ந்த எம்.எஸ். சங்கீதா மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இவர் தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று 2016ல் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றார். தற்பொழுது முதன்முதலாக கலெக்டராக மதுரையில் நியமிக்கப்பட உள்ளார்.

இதுவரை மதுரை மாவட்டத்திற்கு இரண்டு பெண் கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதாவது 1984 - 1985 இல் சந்திரலேகாவும் பின்பு 1991 - 92 இல் கிரிஜா வைத்தியநாதனும் பெண் கலெக்டராக நியமிக்கப்பட்டார்கள். அதன் பிறகு மூன்றாவது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: District collectors, Local News, Madurai