ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் ஊர்கள் இவை தான்

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் ஊர்கள் இவை தான்

மதுரை பவர் கட்

மதுரை பவர் கட்

Madurai Power Cut | மதுரை மாவட்டம்  உசிலம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (நவம்பர் 5) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 5) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே உள்ள உசிலம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரை மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம்: நாகமலை புதுக்கோட்டை , என்ஜிஓ காலனி, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, ஆலம்பட்டி, அச்சம்பத்து மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளா் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown