ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் இவை தான்

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் இவை தான்

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி பகுதியில், நாளை (நவம்பர் 18) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் பகிர்மான கோட்டத்தில் உள்ள வாடிப்பட்டி மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை (வெள்ளிக் கிழமை ) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Rerad : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. வாடிப்பட்டி , பைபாஸ், பழனியாண்டவர் கோயில், பாலமரத்தான் நகர், வி.எஸ். நகர், ஜவுளிபூங்கா, பூச்ச ம்பட்டி, கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் தெரு, சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, போடிநாயக்கன்பட்டி , ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணி நகர், ஆா்.ஆா்வி. நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம்,ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுட் நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என கோட்டப் பொறியாளர் சண்முகராஜ் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown