முகப்பு /மதுரை /

இனி ஊட்டி, கொடைக்கானலுக்கு போக வேண்டாம்.. திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வியூ பாயிண்ட் அமைக்க திட்டம்!

இனி ஊட்டி, கொடைக்கானலுக்கு போக வேண்டாம்.. திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வியூ பாயிண்ட் அமைக்க திட்டம்!

X
மாதிரி

மாதிரி படம்

View Point in Tirupparangunram | மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் மதுரையின் முழு அழகையும் ரசிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத்துறை சார்பில் வியூ பாயிண்ட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையின் அழகை ரசிக்க திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வியூ பாயிண்ட் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் வியூ பாயிண்ட் பார்த்து போட்டோ எடுக்க வேண்டும் என்று நம்மில் பல பேர் அந்த பகுதிகளுக்கு சென்று இருப்போம். அதேபோல் தற்போது நம்ம மதுரையின் அழகை ரசிக்க கூடிய வகையில் வியூ பாயிண்ட் பார்க்க கூடிய வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

மதுரை அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நம்மில் பல பேர் அங்கு சென்று மதுரையின் அழகை ரசித்துக்கொண்டு நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வோம். ஆனால் மதுரையின் முழு அழகையும் ரசிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத்துறை சார்பாக இந்த கோயிலுக்கு மேலே இருக்கக்கூடிய குதிரை சுனை பகுதியில் மதுரையின் அழகை ரசிக்க வியூ பாயிண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே இந்த கோயில் பகுதியில் இருந்து பார்த்தால் மதுரை அழகை ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மழையின் உச்சி பகுதியில் இருப்பதால் அங்கு இருந்து பார்க்கும்போது மதுரையின் முழு அழகையும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும். தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் வியூ பாயிண்ட் அமைக்க அரசு சுற்றுலாத்துறை 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவரக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் மதுரையின் அழகை ரசிக்க வியூ பாயிண்ட் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக இருக்கை வசதி, நிழற்குடை, குடிநீர் போன்ற வசதிகளும் உருவாக்கப்படும் என்றும் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai