முகப்பு /மதுரை /

வைகை ஆற்றுக்கு வந்த அவல நிலை.. மதுரை மக்கள் வைத்த கோரிக்கை..

வைகை ஆற்றுக்கு வந்த அவல நிலை.. மதுரை மக்கள் வைத்த கோரிக்கை..

X
கள்ளழகர்

கள்ளழகர் இறங்கும் வைகை ஆறு

Madurai Vaigai River : கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றினை சுத்தம் செய்து தூர்வார வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு பெற்றது . அதில் மிகவும் சிறப்பு பெற்றது சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு. இந்த நிகழ்விற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பாடாகி பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க குதிரையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இதற்காகவே நள்ளிரவு முதலே அழகரைக்காண வைகை ஆற்றின் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், சமீபத்தில் வைகை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் உள்ள பகுதியில் தூர்வாரப்படாமல் சேரும் சகதியுமாக உள்ளது. இந்த விழாவை காண ஆற்றங்கரையின் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள். அழகரைக்காண வரும் பக்தர்கள் ஆர்வத்தில் 6 அடி இருக்கும் தடுப்பணை அருகே சென்றால் பகுதியில் சிக்கும் அபாயம் உள்ளது.

சேரும் சகதியுமாகக் காணப்படும் வைகை

இதுபோக தண்ணீர் வரும் வைகை ஆற்றின் படிகள் முழுக்க முழுக்க சிதலமடைந்து பிளாஸ்டிக் போன்ற குப்பைகள் உள்ளது. அழகரைக்காண வரும் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை மொட்டை அடித்து ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விட்டால் ஆற்றின் படிக்கட்டுகள் சிதலமடைந்து இருப்பது தெரியாமல் பக்தர்கள் குளிக்கும்போது அபாயம் நேரிடும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் அழகரை தரிசனம் செய்ய வருவதால் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே அழகர் இறங்கும் வைகை ஆற்றினை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது கூட்ட நெரிசலில் 2 நபர்கள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Madurai