முகப்பு /மதுரை /

இந்த வழியா போகாதீங்க.. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்

இந்த வழியா போகாதீங்க.. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்

X
மதுரையில்

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

Madurai City Police : மதுரையில் முக்கிய இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாநகரில் வெகு விமர்சியாக நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மனும்,  மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் எழுந்தருளும் தெற்கு திருவிழா இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்காக மதுரையில் ஏராளமான மக்கள் வருகை தருவர். அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காகவும், எந்தவித போக்குவரத்து இடையூறின்றி தெப்ப திருவிழாவை கண்டு களிக்க அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.

எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

அண்ணா நகர் வைகை வடகரை சாலை அதாவது பி.டி.ஆர். பாலம் வழியாக தெப்பக்குளம் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. விரகனூர் ரிங் ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் சாலை வழியாக நகருக்குள் வரும் அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் தெப்பக்குளம் வழியாக வராமல் வைகை தென்கரை சாலை மூலம் குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.  பெரியாரிலிருந்து முடிச்சாலை ரோடு விரகனூர் சாலை தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி செல்லக்கூடிய அரசு பேருந்து மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் பழைய ராமநாதபுரம் ரோடு வழியாக கேட் வாக் ப்ரோடுச் சென்று அனுப்பாமல் செல்ல வேண்டும்.

மேலும் பெரியாரிலிருந்து முனிச்சாலை ரோடு விரகனூர் சாலை வழியாக நூல் ரிங் ரோடு செல்லக்கூடிய அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கணேஷ் தியேட்டர் சந்திப்பு சென்று ரிங் ரோடு செல்ல வேண்டும் மற்றும் தெப்ப திருவிழாவை காண வரும் பக்தர்களுக்காக அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் முகைதீன் ஆண்டவர் பெட்ரோல் பங்கில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை செல்லலாம். மேற்படி போக்குவரத்து மாற்றுத்திற்க்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை கொடுத்து மாற்று வழி தளத்தை பயன்படுத்தி சிரமம் இன்றி தெப்பத் திருவிழாவை கண்டுகளிக்க மதுரை மாநகர காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Local News, Madurai