முகப்பு /மதுரை /

சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மாதிரி படம்

மாதிரி படம்

Toll booth : சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று வருவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

  • Last Updated :
  • Madurai, India

மதுரை - திருநெல்வேலி தேசிய 4 வழி சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூர் பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகின்றது. இந்த சுங்கச்சாவடியில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் வானங்கள் சென்று வருவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கார் ஜீப் வேன் போன்ற மோட்டார் வாகனங்கள் ரூபாய் 115 இல் இருந்து 120 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூபாய் 175 இல் இருந்து ரூ.180 ஆகவும், மாதந்திர கட்டணமான 50 முறை பயணிக்க ரூபாய் 3,235 லிருந்து ரூ 4,030 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மினி பஸ், LGV ஒரு முறை பயணிக்க ரூபாய் 185 இல் இருந்து 195 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூபாய் 280-ல் இருந்து ரூ.295 ஆகவும், மாதந்திர கட்டணமான 50 முறை பயணித்த ரூபாய் 6,200 இல் இருந்து 6,510 க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கோவை - சேலம் இடையே மின்சார ரயில் ஒரு மாதம் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

அதேபோல் ட்ரக் பஸ் ஒருமுறை பயணிக்க ரூபாய் 390-ல் இருந்து ரூ.410 ஆகவும், ஒரு நாளில் ஒரு முறை சென்று மீண்டும் திரும்ப ரூபாய் 585 லிருந்து 615 ஆகவும், மாதந்திர கட்டணமான 50 முறை பயணிக்க ரூபாய் 12,985 லிருந்து 13,645 ரூபாயாகவும்வசூலிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் கட்டுமானம் எந்திரம் மணல் அள்ளும் எந்திரம் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூபாய் 425 லிருந்து ரூ. 445 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூபாய் 635ல் இருந்து ரூ. 670 ஆகவும், மாதந்திர கட்டணமான 50 முறை பயணிக்க ரூபாய் 14,165 ல இருந்து 14,855 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

top videos

    மேலும் கனரக மற்றும் உயர் கனரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 745 இல் இருந்து 780 ஆகவும், ஒரு நாளில் ஒருமுறை சென்று மீண்டும் திரும்ப ரூ.1,115 இல் இருந்து ரூ.1,170 க்கும், மாதுந்திர கட்டணமான 50 முறை பயணிக்க 24 ஆயிரத்து 790 இல் இருந்து ரூ. 26 ஆயிரத்து 45 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai