ஹோம் /மதுரை /

தொழில்முனைவோர்களுக்கு முக்கிய செய்தி: 17ம் தேதி முதல் செப்.2ம் தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம்

தொழில்முனைவோர்களுக்கு முக்கிய செய்தி: 17ம் தேதி முதல் செப்.2ம் தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் நடைபெறவுள்ள சிறப்பு தொழில் கடன் முகாம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 17ம் தேதி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாம் 17ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் (செப்டம்பர்) தேதி வரை நடக்கிறது.

  இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), டி.ஐ.ஐ.சியின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம், முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள். 0452-2533331, 87780 40572, 9444396842 மூலமாக தொடர்பு கொண்டு விபரம் அறியலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Ramanathapuram