மதுரையில் சிற்பங்கள் மற்றும் நேர்த்தியான ஓவியங்கள் மூலமாக அகநானூறு தொல்காப்பியம் போன்ற சங்க கால இலக்கியங்களை பார்க்க வேண்டுமா? அப்போ இந்த பிளேஸ்க்கு விசிட் பண்ணுங்க.
காந்தி மியூசியம் எதிரே 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இடம்தான் சங்கத்தமிழ் காட்சிக்கூடம். திறக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் மக்களால் அதிகம் அறியப்படாத இடமாகவே இருந்து வருகிறது. காட்சிக் கூடத்தின் நுழைவாயிலின் முன்பக்கச்சுவரில் பாண்டிய அரசவையில் நக்கீரர் முதலான புலவர்கள் முன்னிலையில் தருமிக்கு பாண்டிய மன்னர் பொற்கிளி கொடுப்பது போன்ற கற் சிற்பம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
உள் நுழைவாயிலில் குழந்தை மற்றும் இளைஞர்களுக்கு இப்படியும் சங்க கால இலக்கியங்களை எடுத்துரைக்க முடியுமா என்று சொல்லும் அளவிற்கு நேர்த்தியான ஓவியங்கள் மூலமாக களரிவீசினான், வால் ஏந்தும் கொற்றவன், தண்ணீர் சேர்க்காமல் தன்னுயிர் துறந்த தமிழ் வேந்தன், கடல் கடந்த வாணிபம், நெய்தல் திணை போன்ற புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, தொல்காப்பியம் ஆகிய பாடல்களை உணர்த்தும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், ஔவைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான், முல்லைக்கொடிக்கு தேர் தந்த பாரி, கல்லணை கட்டிய கரிகால சோழன்,தொல்காப்பியர் உள்ளிட்ட பன்னிரு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அகத்தியர், போரில் தந்தை கணவனை இழந்து ஒரே மகனையும் போருக்கு அனுப்பும் வீரத்தாய், பாரியின் மகள்களான அங்கவை,சங்கவை இருவரையும் கபிலர் அழைத்துச் செல்லுதல் போன்ற சங்க கால இலக்கியங்கள் குறித்தநுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களும் அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai