முகப்பு /மதுரை /

மதுரை மக்களே உஷார்.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மதுரை மக்களே உஷார்.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மதுரை பறக்கும் பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்

மதுரை பறக்கும் பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்

Madurai Transport | மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றத்தை மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பறக்கும் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றத்தை மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை நத்தம் சாலையில் அவுட்போஸ்ட் - ஊமச்சிகுளம் இடையே ரூ.612 கோடியில் 7.4 கி.மீ. நீள பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுரை மாநகரில் பறக்கும் பாலம் கட்டுமான இறுதி கட்ட பணியாக ஐஓசி ரவுண்டானாவில் இருந்து பாண்டியன் ஓட்டல் சந்திப்பு செல்லும் சாலையில் மழைநீர் வடிகாலுக்கான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதனால் இன்று முதல் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக 5 நாட்களுக்கு மதுரை மாநகர் காவல்துறையால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நத்தம் சாலையில் இருந்து ஐஓசி ரவுண்டானா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக மேலூர் சாலை மற்றும் வாகனங்களுக்கு மாற்று பாதையாக கோரிப்பாளையம் செல்லும் எஸ்பி. பங்களா சந்திப்பில் இருந்து பாரதி உலா ரோடு வழியாக தாமரைத்தொட்டி சந்திப்பு சென்று வலது புறம் திருப்பி பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக மேலூர் சாலை மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டும்.

தல்லாகுளம் காவல் நிலையம் சாலையில் இருந்தும் ஐஓசி ரவுண்டானா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக மேலூர் சாலை மற்றும் கோரிப்பாளையம் செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதையாக ஐஓசி ரவுண்டானாவில் இருந்து எஸ்பி பங்களா சந்திப்பு சென்று பாரதி உலா ரோடு வழியாக தாமரைத்தொட்டி சந்திப்பு சென்று வலதுபுறம் திருப்பி பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக மேலூர் சாலை மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டும். இந்த வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Transport