முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மீண்டும் மதுரையிலிருந்து புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள்!

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மீண்டும் மதுரையிலிருந்து புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai Railway station | மதுரை டூ சென்னை தேஜஸ் ரயிலும், மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்ட மற்ற ரயில்களும் இன்று முதல் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை - சென்னை தேஜஸ் ரயிலும், மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்ட மற்ற ரயில்களும் இன்று முதல் மதுரை ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.

மதுரை ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக ரயில்போக்குவரத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, பாண்டியன், வைகை விரைவு ரயில் நகர் ரயில் நிலையத்தில் இருந்தும், தேஜாஸ் ரயில் திருச்சியில் இருந்தும் இயக்கப்பட்டன.

தென்காசி- மயிலாடுதுறை நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில் குருவாயூர்- சென்னை உள்ளிட்ட பல ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தற்பொழுது இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்மார்ச் 4ஆம் தேதிமுதல் மதுரையை ரயில் நிலையத்திலிருந்து வழக்கம்போல் இயக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை சென்னை தேஜஸ் ரயில் இன்று முதல் வழக்கம்போல் மதுரையிலிருந்து இயக்கப்படுகின்றது. இதே போல் அமிர்தா எக்ஸ்பிரஸ், தென்காசி-மயிலாடுதுறை நாகர்கோவில்- மும்பை குருவாயூர் -சென்னை உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மதுரை ரயில் நிலையத்தில் வழியாகவே இயக்கப்படுகின்றன.

இது தவிர இதுவரை மண்டபத்துடன் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம்-மதுரை மார்க்கத்திலும் மீண்டும் பழைய முறையில் ராமேஸ்வரம் வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சிக்னலுக்காக இரண்டு பக்கமும் ரயில்கள் காத்திருப்பது தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Tejas Express, Train