ஹோம் /மதுரை /

பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள்.. தமுக்கம் மைதானத்தில் களைகட்டும் மதுரை புத்தக கண்காட்சி..

பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள்.. தமுக்கம் மைதானத்தில் களைகட்டும் மதுரை புத்தக கண்காட்சி..

மதுரை

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி..

Madurai Book Fair 2022 | மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 23ம் தேதி தொடங்கப்பட்ட புத்தக கண்காட்சி வருகின்ற அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை தமுக்கம் மைதானத்தில் 2022ம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சி கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு என்ன வகையான புத்தகங்கள் கிடைக்கின்றன, என்னெல்லாம் ஸ்பெஷல் என்பதை அறிய ஒரு விசிட் அடித்தோம்..

மதுரை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த இந்த புத்தக கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் சென்னை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் 200கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் சுமார் 250 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியானது, காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கம், மேலும் அவர்களுக்கென பிரத்யேக புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி..

கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு அரங்கிற்கு வெளியில் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி..

தினமும் மாலையில் அரங்கிற்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேச்சு போட்டி, பட்டிமன்றம் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுபோக கண்காட்சிக்கு வருபவர்கள் அங்கு வந்து நேரம் செலவழிக்கும் விதமாக 15க்கும் மேற்பட்ட உணவு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செப்டெம்பர் 23ம் தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சியானது அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பினை மதுரை மாவட்டம் மற்றும்  சுற்றுப்பகுதி மக்கள் அனைவரும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Book Fair, Local News, Madurai