ஹோம் /மதுரை /

கீழடியின் சிறப்புகளை விவரிக்கும் புத்தகம் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியீடு.. இதில் என்ன ஸ்பெஷல்?

கீழடியின் சிறப்புகளை விவரிக்கும் புத்தகம் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியீடு.. இதில் என்ன ஸ்பெஷல்?

கீழடி

கீழடி

Madurai Keeladi | கீழடி குறித்த தகவல்களை ஒன்று திரட்டி  ‘கீழடி - மகிமை சிந்து   வழிநடை சிந்து’ என்ற இரண்டு நிலைகளை கொண்ட புத்தகத்தை மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையம் புத்தக திருவிழாவில்   வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை அருகே  ‘கீழடி’ கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடந்து வருவது நாம் அனைவருமே அறிந்த ஒன்று தான்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு மற்றும் மேலும் பல விடயங்கள் இந்த அகழ்வாராய்ச்சி மூலமாக நம் செவிகளை அடைந்தது, அவ்வாறு செவிகளில் நாம் கேட்ட செய்தி தற்போது இலக்கிய புத்தக வடிவில் நாம் படிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

2018/19 ஆண்டுகளில் நடந்த ஐந்தாம் கட்ட மற்றும் ஆறாம் கட்ட கீழடி தொல்லியல் ஆராய்ச்சியில் பணி புரிந்தவர் தான்  ராஜா, மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் 2019 முதல் கடந்த மூன்று வருடங்களாக உழைத்து, கீழடி குறித்த தகவல்களை ஒன்று திரட்டி  ‘கீழடி - மகிமை சிந்து   வழிநடை சிந்து’ என்ற இரண்டு நிலைகளை கொண்ட புத்தகத்தை மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையம் புத்தக திருவிழாவில்   வெளியிட்டார்.

மேலும் படிக்க:  மதுரை மாநகரில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களின் சிறப்புகள் தெரியுமா?

இந்த புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் சிலவற்றை அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார் அப்போது அவர் கூறியதாவது:

இந்த புத்தகத்தில் கீழடி மகிமை சிந்து, மற்றும் கீழடி வழிநடை சிந்து என்ற இரண்டு நிலைகள் உள்ளதாகவும் இதில் மகிமை சிந்து என்ற பகுதியில் கீழடியின் சிறப்புகள் மற்றும் அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும், வழிநடை சிந்து என்ற பகுதியில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து கீழடிக்கு செல்லும் பாதையை வரைபடமாக கொடுத்து அப்பாதையில் வரும் சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய கோயில்களை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Keeladi, Local News, Madurai