முகப்பு /மதுரை /

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மதுரை மாவட்டத்தில் 95.84% பேர் தேர்ச்சி!

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மதுரை மாவட்டத்தில் 95.84% பேர் தேர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai 12th Results 2023 | மாணவர்களுக்கு செல்போனில், குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டில், 12 ஆம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, மதுரை மாவட்டத்தில், 95.84%  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 34,753 பேரில்,  16,000 ஆண் மாணவர்களும், 17,306 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. www.dge.tn.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கு செல்போனில், குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ப்ளஸ் டூ முடிவுகளை உடனே தெரிந்துகொள்ள லைவ் அப்டேட்ஸ்

top videos

    மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.

    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Local News, Madurai