மதுரை என்றாலே உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஜில்லென்று ஜிகர்தண்டா, மணக்கும் மல்லிகை, களைகட்டும் சித்திரை திருவிழா இவைதான் பேமஸ் என்று சொல்வார்கள். ஆனால் மண் மணக்கும் மதுரையில் இவை மட்டும் ஃபேமஸ் ஆனவை இல்லை.
மதுரைக்கும் திரைப்படத்துறைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு ஒன்று உள்ளது. ஏனென்று கேட்டீர்கள் என்றால் திரைப்படத்துறையில் மதுரையில் ஒரு படத்தை ஷூட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் என்றால் மதுரையில் உள்ள சிறப்புமிக்க பழமையான இடங்களில் கண்டிப்பாக ஒரு குட்டி சீனயாச்சும் சூட் பண்ணுவார்கள்.
அப்படி மதுரையோட சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றுதான் மதுரையின் காவல் தெய்வமான பாண்டி கோவில். இந்த கோவிலில் காதுகுத்தியிருந்து கிடாவெட்டு வரைக்கும் மிகவும் பிரபலம் என்று நமக்குத் தெரிந்த ஒன்றே. ஆனால் இந்தப் பாண்டி கோவில் இடம் தான் மூவி ஷூட்டிங் பாட்டுக்கும் மிகவும் பிரபலமானது.
இதையும் படிங்க : அதிர்ச்சி வீடியோ.. புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்..
கிடாய் வெட்டுவதற்கும் கிடாய் விருந்து சாப்பிடுவதற்கும் இந்த கோவிலின்எதிர்ப்புறத்தில்இதற்கென்று ஒரு தனியாக இடம் உள்ளது இந்த இடத்தில் தான் சில படங்களை ஷூட் செய்துள்ளார்கள். அப்படி சூட் செய்த படங்களில் ஒன்று தான் சிவகார்த்திகேயன் நடிச்ச ரஜினி முருகன் படம். இந்தப் படத்தில் ராஜ்கிரனுக்கும் சமுத்திரகனிக்கும் இடையே ஒரு பஞ்சாயத்து காட்சி வரும்.
இந்த காட்சிக்காக சிவகார்த்திகேயனும், சூரியனும் பஞ்சாயத்திற்கு என்ட்ரி கொடுத்த மாதிரியும், நாட்டாமை எல்லாரும் சேர்ந்து பஞ்சாயத்து பண்ற மாதிரியும் வரும், மேலும் மாட்டை அவுத்துவிட்டு பஞ்சாயத்து கலைப்பது போன்ற காட்சி அந்த பஞ்சாயத்து சீன் முழுவதும் இந்த இடத்தில் தான் முழுக்க முழுக்க ஷூட் செய்து இருப்பார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல் விக்ரம் பிரபு நடிச்ச புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் வேண்டாம் மதுப்பழக்கம் என்ற பாடல் முழு சீனையும் இந்த இடத்தில் தான் டாஸ்மாக் மாதிரி செட்அப் போட்டு ஷூட் பண்ணி இருப்பார்கள். இந்த மாதிரி மதுரையில் பல படங்களை ஷூட் செய்து உள்ளார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Sivakarthikeyan, Tamil Cinema, Vikram Prabhu