முகப்பு /மதுரை /

மதுரையில் கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் சல்லடம், சாமி வேடம் அணியும் துணிகள் எப்படி தயாராகின்றன தெரியுமா?

மதுரையில் கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் சல்லடம், சாமி வேடம் அணியும் துணிகள் எப்படி தயாராகின்றன தெரியுமா?

X
மதுரை

மதுரை சித்திரை திருவிழா

Madurai Kallazhagar Chithirai Festival 2023 : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் நிகழ்வை ஒட்டி பக்தர்கள் அழகர் வேடம் அணியும் துணிகளை குன்னத்தூர் சத்திரத்தில் தைக்கும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெறுகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Madurai, India

மதுரையின் முக்கிய அடையாளமாக சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழா வந்தாலே மதுரை மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திலிருந்து திக்விஜயம்,தேரோட்டம், பூப்பல்லாக்கு, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல், கள்ளழகர் எதிர்சேவை என்று 10 நாட்கள் நடக்கும் இந்த சித்திரைத் திருவிழா ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கு வைப் செய்வது போல் இருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலனுக்காகவும், தொழில் விவசாயம் பெறுக வேண்டும் என்றும்,நேர்த்தி கடனாக விரதம் எடுத்து அழகர் உடை அணியும் பக்தர்களுக்கு தண்ணீர் பீச்சும் சல்லடம், சாமி டவுசர், பரிவட்டம் தீபந்தம் என குன்னத்தூர் சத்திரத்தில் இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக துணிகளை தைத்துக் கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவையொட்டி இந்த வேலைகள் எல்லாம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து குன்னத்தூர் சத்திரத்தில் கடை வைத்திருக்கும் அமீர்ஜான் கூறும்பொழுது, “முதலில் என்னுடைய அப்பா புது மண்டபத்தில் கடை நடத்தி வந்தார். பின்பு குன்னத்தூர் சதுரத்தின் நான் நடத்தி வருகின்றேன். சித்திரை திருவிழா ஒட்டி கள்ளழகர் நிகழ்வு அன்று பக்தர்கள் சுவாமி வேடம் அணியும் உடைகளை வாங்குவதினால், நாங்களே தண்ணீர் பீச்சும் சல்லடம் சாமி டவுசர், மாரடி, பரிவட்டம், தீ பந்தம் என அனைத்து வகையான திருவிழா நிகழ்வு துணிகளை தைத்துக் கொடுக்கிறோம்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு படங்கள் இங்குதான் ஷூட் செய்யப்பட்டதா? மதுரையில் இந்த இடம் ரொம்ப ஃபேமஸ்..

இந்த நிகழ்வை ஒட்டி அதிகமாக கிராமம்மற்றும் நகரம் மக்கள் இந்த துணிகளை வாங்க வருவர்கள்.நாங்கள் ரெடிமேட் ஆகவே பெரியவர்கள், சிறியவர்களுக்கு என அனைவருக்கும் தைத்து வைத்திருப்போம். தண்ணி பீச்சும் சல்லடம் 1000 ரூபாய்க்கும், சாமி டவுசர் மாரடி போன்றவை 300 ரூபாய்க்கும் தீப்பந்தம் 150 லிருந்து 500 ரூபாய்க்கும் தற்பொழுது வரை விற்பனை செய்து வருகின்றோம். இந்த வேலைகள் அனைத்தும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னாள் வரை நடைபெறும்” என்று கூறினார்.

இதேபோல் கடை உரிமையாளரான நாகரத்தினம் கூறும்பொழுது, “எனக்கு வயது 71 கிட்டத்தட்ட 55 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகின்றேன். 12 மாதம் அடங்கிய ஒரு வருடத்தில் 11 மாதம் ஜாக்கெட் பிளவுஸ் போன்ற துணிகளை தைத்து தருவேன். இந்த சித்திரைத் திருவிழாவை ஒட்டி சித்திரை மாதத்தில் மட்டும் தான் தண்ணீர் பீச்சும் சல்லடம் போன்ற சுவாமி வேடம் அணியும் துணிகளை தைத்துக் கொடுக்கின்றேன். பரம்பரையாக இத்தொழிலை செய்து வருவதினால் இதனை ஒரு தொண்டாக தற்பொழுது வரை செய்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    குறிப்பாக தண்ணீர் பீச்சும் சல்லடம் மற்றும் ஜட்டிகளை வேலைப்பாடுகள் நிறைந்த 3 வகையான துணிகளை கொண்டுஅதாவது, வெல்வெட், சாட்டின், அல்ட்ரா வெல்வெட் போன்ற துணிகளை பயன்படுத்தி தைத்துக் கொடுப்பதினால் 1200 இல் இருந்து 2200 வரை விற்பனை செய்து வருகின்றேன். இது போன்ற துணிகளை ஒரு நாளைக்கு இரண்டு துணிகள் மட்டும் தான் தைத்துக் கொடுக்க முடியும் என்பதால் ஒரு மாதம் வரை இந்த வேலைகள் இருக்கும் இது போக ஆர்டருக்கு வரும் துணிகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போலையும் தைத்துக் கொடுக்கிறேன்” என்றார்.

    First published:

    Tags: Local News, Madurai