கடந்த சில ஆண்டுகளாகவே வாக்கர் கிளப் மூலம் மதுரை சுந்தரம் பார்க் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மதுரை சுந்தரம் பூங்காவின் வலது புறத்தில் சுமார் 1.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நடை பாதை ஒரு சதுர வடிவில் காணப்படுகின்றது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றார்கள். முதியவர் முதற்கொண்டு இளைஞர்கள் வரை ஜாக்கிங், வாக்கிங் என 1.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்நடை பாதையில் சுமார் மூன்று முறையாவது சுற்றி தனது பயிற்சியினை மேற்கொள்கின்றார்கள். சிலம்பம் கற்றுத் தருவதற்கான பயிற்சிகளும் நடைபெறுகின்றது. அதிகாலையிலே 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் சிலம்பு பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள்.
அதன் அருகினிலேயே ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்ட உள்ளது. இம்மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஷிப்ட் முறையில் பயிற்சியினை மேற்கொள்கின்றார்கள். மேலும் இப்பயிற்சியின் மூலம் ஸ்கேட்டிங் போட்டிகளிலும் கலந்து கொள்கின்றார்கள்.
நுழைவுவாயிலின் எதிர்ப் புறத்திலே மதுரை வண்டியூர் கண்மாய் காட்சியளிக்கின்றது. கண்மாயை அருகில் சென்று பார்ப்பதற்காகவே சிறிய நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கேரளா, கொடைக்கானல் போன்ற சூழலை உருவாக்குவதால் இங்கு வரும் கல்லூரி மாணவர்கள் போட்டோ சூட், குறும்படம் எடுத்தல்ஆகியவற்றில் ஈடுபடுகின்றார்கள்.இடது புறத்தில் மினி ஜிம்மே இருக்கின்றது என்று கூட சொல்லலாம்.
ஜிம்மில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட மினி ஜிம் ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனியாகஇருக்கின்றது.
அதன் அருகிலேயே ஷட்டில் கார்க் விளையாடும் ஒரு சிறிய மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்திற்கு வரும் மக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடிவிட்டு தான் செல்கின்றார்கள்.மேலும் இங்கு குழந்தைகளுக்கு என பிரத்யோகமாகவே விளையாட்டு பூங்காவும் உள்ளது.
ரூ.2 லட்சம் வரை வருமானம்.. பகுதி நேரத்தில் பசு மாடு வளர்ப்பு.. சீக்ரெட்டை சொன்ன மதுரை பேராசிரியர்..
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai