முகப்பு /மதுரை /

மதுரை மாணவிகள் மாதம் ரூ.1000 உதவி தொகை பெற இதை மட்டும் செய்தால் போதும்..

மதுரை மாணவிகள் மாதம் ரூ.1000 உதவி தொகை பெற இதை மட்டும் செய்தால் போதும்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Madurai District News | மேல்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைபெண் திட்டம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை பெற வழிவகை செய்யும், புதுமைபெண் திட்டம் தொடர்பாக, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைபெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில், 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது, இந்த வலைதளத்தில் (https://www.pudhumaipen.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும்மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும்சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1ம் தேதி முதல் 11-ந் தேதி வரைபதிவுசெய்யலாம். அரசு பள்ளிகளில்பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது. இந்த திட்டதின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள்நடைபெறும்.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார்அட்டை மற்றும் (கல்விமேலாண்மை தகவல்திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4-ம்ஆண்டுகளில்படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநிலஅளவில் செயல்படும் உதவிமையத்தினை திங்கள்முதல் வெள்ளிவரை, காலை 10 மணிமுதல்மாலை 5 மணிவரை (91500 56809), (91500 56805), (91500 56801) மற்றும் (91500 56810) எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மேலும், mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தொழில் நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: College girl, College student, Local News, Madurai