Home /madurai /

மதுரை தமிழ்ச்சங்கத்தில் ஜூலை 25ல்  மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி.. பரிசு வெல்ல தயாரா?

மதுரை தமிழ்ச்சங்கத்தில் ஜூலை 25ல்  மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி.. பரிசு வெல்ல தயாரா?

மதுரை - பேச்சுப்போட்டி

மதுரை - பேச்சுப்போட்டி

Madurai District | மதுரை தமிழ்ச்சங்கத்தில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி வரும் ஜூலை 25ல் நடைபெறுகிறது

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி ஜூலை 28 ஆம் தேதி மதுரை தமிழ்ச்சங்கத்தில் நடைபெறுகிறது.

நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபட்ட தலைவா்களின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஆண்டுதோறும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி ஜூலை 28 ஆம் தேதி நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் போட்டி நடைபெறும்.

மதுரை உலக தமிழ் சங்கம்


போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியா் தங்களது பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். போட்டிக்கான தலைப்புகள், மாணவா்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படமாட்டாது. தமிழ் வளா்ச்சி இயக்கத்திலிருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும் தலைப்புகள், போட்டியின்போது நடுவா்கள் மற்றும் மாணவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே, ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத் தொகை வழங்கப்படும். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி