ஹோம் /மதுரை /

மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் - இந்த ரயில்களை பயன்படுத்துங்கள்.!

மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் - இந்த ரயில்களை பயன்படுத்துங்கள்.!

மதுரை

மதுரை

Madurai District | பயணிகளின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு,  மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே யஸ்வந்தப்பூர்-நெல்லை, மைசூர்-தூத்துக்குடியே  மதுரை வழியாக செல்கிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

பயணிகளின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே யஸ்வந்தப்பூர்-நெல்லை, மைசூர்-தூத்துக்குடியே மதுரை வழியாக செல்கிறது.

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வரும் 4 மற்றும் 11ம் தேதிகளில் (செவ்வாய்க் கிழமை) யஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 5 மற்றும் 12ம் தேதிகளில் (புதன்கிழமை) நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும். இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

இதையும் படிங்க : மதுரை மாவட்டம் முழுவதும் அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம்!

இதேபோல் மைசூர்-தூத்துக்குடி இடையே பண்டிகை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இது நேற்று (30ம் தேதி) மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, இன்று அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி சென்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மறு மார்க்கத்தில் இன்று (1ம் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் நாளை (2ம் தேதி) மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும். இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai