முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மதுரை ரயில்

மதுரை ரயில்

Madurai Special trains | கோடை கால விடுமுறையையொட்டி பொதுமக்கள் அதிக இடங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கோ அல்லது வெளியூருக்கோ செல்வதினால் பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கக்கூடிய வகையில் தென்னக ரயில்வே சார்பில் தாம்பரத்திலிருந்து மதுரைவழியாககன்னியாகுமரிக்குசிறப்பு ரயில் இயக்கப்படும் என்று மதுரை தென்னக ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரைவழியாககன்னியாகுமரிக்கு ஒரு வழிசிறப்புகட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 5மணிக்குதாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுநாள் அதிகாலை 6 10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். பின்பு காலை 8:45மணிக்குகன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடையும்.

ALSO READ | மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

இந்த ரயில் செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு பொதுப் பெட்டிகள், இரண்டுமாற்றுத்திறன்களுக்கானபெட்டிகள் இணைக்கப்படும் என்றும் இந்த ரயிலில் வழக்கமானடிக்கெட்கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும் என்று மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Southern railway, Train