முகப்பு /மதுரை /

ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

ரயில்

ரயில்

Special train | ரயில்வே ஊழியர்களுக்காக போடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் இருந்து ரயில்வே ஊழியர்களுக்காக, போடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை-போடி ரயில் கடந்த மே மாதம் 27ஆம் தேதி முதல் தேனி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 15 கி.மீ தூரமுடைய தேனி-போடி ரயில்வே வழித்தடத்தில் செய்யப்பட்டு வந்த பணிகள் அனைத்தும்தற்போதுமுழுமையாக முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், போடி வரை ரயிலை நீட்டித்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்கு நியமிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்கள் வியாழக்கிழமை (30.03.2023)போடிக்கு செல்ல உள்ளனர். இவர்களுடன் மற்ற அலுவலர்களும் செல்கின்றனர். இதற்காக தேனியில் இருந்து காலை 9.45 மணிக்கும், போடியில் இருந்து மாலை 5.30 மணிக்கும் ரெயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

போடியில் ரயில்நிலையம் டெர்மினல் தன்மையுடன் இருப்பதால், அங்குள்ள கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர். பின்பு மாலை 5.30 மணிக்கு இதேரெயிலில் மதுரை கிளம்பி வருகின்றனர்.

தண்டவாள ஆய்வு, சமிக்ஞை சோதனை, ஊழியர்களின் பணி ஒத்திகை போன்றவை அடுத்தடுத்து நடைபெறுவதால், மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரயில் இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Southern railway, Train