ஹோம் /மதுரை /

மதுரையில் இருந்து காச்சிகுடாவுக்கு சிறப்பு ரயில் - முழு விவரம்

மதுரையில் இருந்து காச்சிகுடாவுக்கு சிறப்பு ரயில் - முழு விவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Madurai Kacheguda Special Train | மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலத்தில உள்ள காச்சிகுடாவுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரையில் இருந்து காச்சிகுடாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காச்சிகுடாவில் இருந்து நவம்பர் 7, 14, 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 8:50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், மறுநாள் இரவு 8:45 மணிக்கு மதுரையை வந்தடையும்.

  அதேபோல, மதுரையில் இருந்து நவம்பர், 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28ஆம் தேதிகளில் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை 7:05 மணிக்கு காச்சிகுடா சென்றடையும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

  Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

  இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், ஹஜூர் சாஹிப் நந்தீத்தில் இருந்து, நவம்பர் 4, 11, 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23 மற்றும் 30ஆம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் இரவு 8:15 மணிக்கு, கேரள மாநிலம், எர்ணாகுளம் சென்றடையும்.

  எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் டிசம்பர் 3, 10, 17, 24, 31ஆம் தேதிகளில் இரவு 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 7:30 மணிக்கு, ஹஜூர் சாஹிப் நந்தீத்துக்கு சென்றடையும்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  இந்த சிறப்பு ரயில்கள், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான முன்பதிவு, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வருகிறது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Madurai, Special trains, Train