ஹோம் /மதுரை /

ராமேஸ்வரம் - மதுரை இடையே சிறப்பு ரயில்... வாரத்தில் 3 நாட்கள் இயக்க திட்டம்...

ராமேஸ்வரம் - மதுரை இடையே சிறப்பு ரயில்... வாரத்தில் 3 நாட்கள் இயக்க திட்டம்...

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Special Train | ராமேஸ்வரம்-மதுரை இடையே, கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பயணிகளின் வசதிக்காகவும் வாரந்தோறும் 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் - மதுரை இடையே பகல் நேரத்தில் வாரம் மூன்றுமுறை ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, இந்த சிறப்பு கட்டண ரயில் (வ.எண் - 06780) கடந்த திங்கட்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், இந்த நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 6.20 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றால் கட்டப்பட்டது...! பிரம்மிப்பூட்டும் மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் சிறப்புகள்..!

இந்த ரயிலானது ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இதில், பயணம் செய்வதற்கு வழக்கமான கட்டணத்தை விட, 1.3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ரயிலானது, வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை கோட்ட மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கிடைேய ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் முதன்மை பராமரிப்பு ரயில்கள் அனைத்தும் மதுரை ரயில்பெட்டிகள் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ரயில்கள், பராமரிப்பு பணிக்காக மதுரை கொண்டு வரப்படுகின்றன. ஆனால், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வரை காலி ரயிலாக இயக்குவதற்கு மாறாக, பயணிகளின் நலன் கருதி, அவை சிறப்பு ரயிலாக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai, Special trains