ஹோம் /மதுரை /

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் 1, 2ம் தேதிகளில் சிறப்பு முகாம்

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் 1, 2ம் தேதிகளில் சிறப்பு முகாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Madurai District News | மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் (செவ்வாய்-புதன்) சிறப்பு முகாம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் விதமாக மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க் கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

நவம்பர் மாதத்தில் 1ஆம் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2 ஆம் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Physically challenged