முகப்பு /மதுரை /

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு!

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Special AC Buses from Madurai to Kodaikanal : கோடை காலத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து கொடைக்கானலுக்க குளிர்சாதன சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று ஆரப்பாளையம் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள்  இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஏப்ரல், மே போன்ற மாதங்களில் கோடை காலம் ஆரம்பித்து விடும் அதேபோல் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவருக்கும் விடுமுறை விடக் கூடிய காலமாக கோடை காலம் இருக்கின்றது. இதனால் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் மக்கள் அனைவரும் வெளியூருக்கு அல்லது டூருக்கு செல்வார்கள்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதினால் மதுரை முதல் கொடைக்கானல் வரை சிறப்பு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில், சிறப்பு ஏசி பேருந்துகள் தினமும் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் முதல் கொடைக்கானல் வரை செல்லும் என்றும் இந்த பேருந்துகளில் கட்டணம் ரூபாய் 150 வசூலிக்கப்படும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4:45 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் இந்த பேருந்து 8.30 மணி அளவில் கொடைக்கானல் செல்லும் என்றும் அதேபோல் காலை 9:30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேரும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பேருந்து இடைநில்லா பேருந்து என்பதால் மதுரையிலிருந்து நேரடியாக கொடைக்கானல் செல்லும் என்றும், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kodaikanal, Local News, Madurai