முகப்பு /மதுரை /

மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது - மதுரை கோட்டம் அறிவிப்பு!

மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது - மதுரை கோட்டம் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Southern Railway : மேலூர் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நின்று செல்லாது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மேலூர் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நின்று செல்லாது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட இயக்க மேலாளர் ஜோசப் மேத்யூ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மதுரை - தூத்துக்குடி இடையிலான இரட்டை வழி ரயில் பாதை மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில், தூத்துக்குடி - மேலூர் ரயில் நிலையமானது புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரயில்கள் நின்று செல்லும் வகையில், மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணியை மார்ச் மாதஇறுதிக்குள் முடித்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய ரயில் வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்த போதும், சில பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவுப்படுத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி-மேலூர் ரயில் நிலையத்தில், இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ரயில்கள்நின்று செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில், திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் அடுத்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது” என தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Local News, Madurai