Home /madurai /

ஈரோட்டில் பராமரிப்புப் பணி: மதுரையைக் கடந்து செல்லும் முக்கிய ரயில்களின் வழித்தடம் மாற்றம்

ஈரோட்டில் பராமரிப்புப் பணி: மதுரையைக் கடந்து செல்லும் முக்கிய ரயில்களின் வழித்தடம் மாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக மதுரையைக் கடந்து செல்லும் முக்கிய ரயில்களின் வழித் தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரையைக் கடந்து செல்லும் சில ரயில்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் ஈரோடு வழிக்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து செல்லும் ரயில்கள் நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம் வழியாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 14 வரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் பாதைப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், சில ரயில்கள் கரூா், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

    மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:

    ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28, ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16788), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25, ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா விரைவு ரயில் (16787).

    சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29 மற்றும் ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய
    நாள்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (12688), மதுரையில் இருந்து ஜூலை 27, 31 மற்றும் ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய சண்டிகா் விரைவு ரயில் (12687).

    ஓகாவில் இருந்து ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (19568),  தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரயில் (19567),

    கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30 ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (17616), மதுரையில் இருந்து ஜூலை 31 ஆகஸ்டு 7, 14 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில்(17615)

    தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய மைசூா் விரைவு ரயில் (16235), மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்குப் பதிலாக கரூா், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் இவ்வாறு அதில் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி