முகப்பு /மதுரை /

மதுரை மக்களே உஷார்.. இந்த ரூட்டில் எல்லாம் ரயில் சேவை மாற்றம்!

மதுரை மக்களே உஷார்.. இந்த ரூட்டில் எல்லாம் ரயில் சேவை மாற்றம்!

மதுரை ரயில்

மதுரை ரயில்

Madurai train | மதுரை-கோவை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கோ அல்லது வெளியூருக்கோ செல்வதினால் பல்வேறு சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டது.அந்த வகையில் மதுரை-கோவை ரயில்வே சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரயில் நிலைய பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடப்பதால் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை ரயில் நிலையம்

அதன்படி மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றதையும் மதுரை கோவை ரயில் இந்த இரண்டு நாட்களும் மதுரையிலிருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் போத்தனூர் கோவை இடையே ரத்து செய்யப்படும்.

இதையும் படிங்க | களைகட்டும் மதுரை சித்திரை திருவிழா.. கள்ளழகருக்காக தயாராகும் வைகை ஆறு!

அதேசமயம் கோவை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை ரயில் இரண்டு நாட்களுக்கு கோவைக்கு பதிலாக போத்தனூரில் இருந்து மதியம் 2.52 மணிக்கு புறப்படும் என்று மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai, Southern railway, Train