முகப்பு /மதுரை /

12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம்..

12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம்..

X
மதுரையில்

மதுரையில் ஆர்ப்பாட்டம்

Madurai Protest : மதுரை திருவள்ளுவர் சிலை அருகே சோசியலிசத் தொழிலாளர்கள் மையம் மற்றும் தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம் சார்பாக 12 மணி நேர சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே சோசலிச தொழிலாளர்கள் மையம் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பாக 12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆரோக்கியமேரி தலைமை வகித்தார். நூற்றாண்டு மே நாள் ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பில் திமுக அரசு நிறைவேற்றியது. தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள், கட்சிகள், இயக்கங்கள் எதிர்ப்பின் விளைவாக சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பது தொழிலாளர்களுக்கு தேவை என வலியுறுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Madurai