முகப்பு /செய்தி /மதுரை / Video : திருமங்கலத்தில் பையில் இருந்து படமெடுத்த நல்ல பாம்பு... பதுங்கிய உரிமையாளர்

Video : திருமங்கலத்தில் பையில் இருந்து படமெடுத்த நல்ல பாம்பு... பதுங்கிய உரிமையாளர்

வீட்டில் புகுந்த பாம்பு

வீட்டில் புகுந்த பாம்பு

Thirumangalam | திருமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு - பைக்குள்ளிருந்து சீறி வந்த பாம்பை பத்திரமாக மீட்ட சமூக ஆர்வலர்

  • Last Updated :
  • Thirumangalam (Tirumangalam), India

திருமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு வீட்டிலிருந்த பை ஒன்றில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.  பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து பாம்பை பத்திரமாக மீட்டு வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். 

திருமங்கலம் சந்தைப்பேட்டை அருகில் வசித்து வரும் தண்டபாணி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை காலை கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது யாரோ எழுப்புவது போல் தோன்றவே விழித்துப் பார்த்த தண்டபாணிக்கு தலைக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஒரு வழியாக சுதாரித்து கட்டிலில் இருந்து எழுந்து பாம்பை அடிக்க முற்பட்டபோது பாம்பு நழுவி கட்டில் அருகில் இருந்த பை ஒன்றில் புகுந்தது. சுதாரித்த தண்டபாணி பைக்குள் பாம்பு புகுந்ததால் லாவகமாக பையில் இருந்த ஜிப்பை மூடினார் பின்னர் பாம்பு பிடி வீரரான சமூக ஆர்வலர் சகாதேவன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

' isDesktop="true" id="971743" youtubeid="G2DhIc7oKQA" category="madurai">

இந்த தகவல் அறிந்த சகாதேவன் உடனடியாக தண்டபாணி வீட்டிற்கு வந்து பையில் இருந்த ஜிப்பை திறந்த போது நல்ல பாம்பு சீறிக்கொண்டு வெளியில் வந்தது. இதனை கண்ட தண்டபாணி குடும்பத்தினர் அலறி துடித்தனர்.

மேலும் படிக்க... உயிர் பயத்தால் பூட்டப்பட்ட வீடு.. 2 வருடமாக தனிமையில் வாழும் குடும்பம்.. குமரியில் விநோதம்

அவர்களுக்கு ஆறுதல் கூறிய பாம்பு பிடி வீரர் சகா பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்று விட்டார். தண்டபாணி வீட்டிற்குள் நல்ல பாம்பு புகுந்த செய்தி அப்பகுதியில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

top videos

    செய்தியாளர்: சிவக்குமார் தங்கையா, திருமங்கலம்

    First published:

    Tags: Madurai, Snake, Thirumangalam