ஹோம் /மதுரை /

வண்டியூர் ஸ்மார்ட்சிட்டி சாலையில் ஸ்கேட்டிங் சிறுவர்கள் அரக்க பறக்க பயிற்சி..

வண்டியூர் ஸ்மார்ட்சிட்டி சாலையில் ஸ்கேட்டிங் சிறுவர்கள் அரக்க பறக்க பயிற்சி..

வண்டியூர்

வண்டியூர் ஸ்மார்ட்சிட்டி சாலையில் ஸ்கேட்டிங் சிறுவர்கள் அரக்க பறக்க பயிற்சி..

Madurai : மதுரை வண்டியூர் பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற உள்ள புதிய ஸ்மார்ட்சிட்டி பைபாஸ் சாலையில் வாகனங்களை இன்னும் அனுமதிக்காததால் அங்கே ஸ்கேட்டிங் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  துரை வண்டியூர் பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற உள்ள புதிய ஸ்மார்ட்சிட்டி பைபாஸ் சாலையில் வாகனங்களை இன்னும் அனுமதிக்காததால் காலை, மாலை வேளைகளில் ஸ்கேட்டிங் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக வைகை கரையோரங்களிலும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வண்டியூர் ஒட்டிய வைகைக் கரையில் நடைபெற்ற சாலை பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

  வாகனங்கள் அனுமதிக்கப்படாத அந்த சாலையில் காலை, மாலை வேளைகளில் ஹாயாக மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி செய்கின்றனர். இன்னும் சில நாள்களில் வாகனப் போக்குவரத்து இந்தச் சாலைகளில் சூடுபிடிக்கத் தொடங்கி விடும். அதுவரை விளையாடிக் கொள்கிறோம் என்பது போல இங்கு மாணவர்கள் பயிற்சியெடுத்து ஆடி மகிழ்கின்றனர்.

  பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்ததும் தங்கள் பயிற்சியாளர்கள் துணையுடன் இந்த வைகையின் சிலுசிலு காற்றுப் பக்கம் வந்து கால்களில் சக்கரங்கள் கட்டி அழகாக பயிற்சி எடுத்து வருகின்றனர். சாலை திறக்கப்பட்டதும் இந்த எரியாவின் குளுகுளு பயிற்சியை கட்டாயம் மிஸ் செய்வார்கள் இந்த மாணவர்கள்.

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

  Published by:Suresh V
  First published:

  Tags: Madurai, Smart City