பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றார்கள். குறிப்பாக விளையாட்டு தளங்களில் இவர்களின் சாதனைகள் ஏராளம்.மதுரையைச் சேர்ந்த சௌமியா மற்றும் சோபிகா என்றசகோதரிகள் ஜிம்னாஸ்டிகள் சாதனை படைத்துள்ளார்கள். இவர்கள் மதுரையில் எடிட்டோ கல்லூரியில் ஸ்போர்ட் கோட்டாவின் மூலமாக படித்து வருகின்றார்கள்.
பள்ளி பருவங்களில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட பொழுது, ஜிம்னாஸ்டிகில் ஆர்வம் கொண்டு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கருணாகரன் மூலமாக ஜிம்னாஸ்டிகில் இணைந்து பயிற்சி பெற்றனர்.
இது குறித்து சௌமியா மற்றும் ஷோபிகா கூறும்பொழுது, ஜிம்னாஸ்டிக்கில் நான்கு வகையான ஸ்டேஜ்கள் உள்ளன.இதில் நாங்கள் செய்வது ஆர்ட்டிஸ்ட் ஸ்டிக்ஸ். இதை செய்வதற்கு பிளக்ஸ்பில்லாக இருக்க வேண்டும். முதலில் சற்று கடினமாக இருந்தது. பின்பு போகப்போகநாங்கள் எளிதாக கற்றுக் கொண்டோம்.
மேலும் பீம் டேபிள் அன்ஈவென்பார் போன்ற நிலைகள் உள்ளன.இந்த நிலைகள் செய்வதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் யோகா பயிற்சியில் இருந்ததால இந்த நிலைகளை நாங்கள் கற்றுக்கொண்டோம். நாங்கள் டிவிஷனல் லெவல் ஸ்டேட் லெவல் போன்றவற்றில் கலந்து கலந்துகொண்டு தங்கமெடல்களை வென்றுள்ளோம்.
அப்பா டிரைவர்,அம்மா ஹவுஸ் வைஃப் ஆகஇருக்கின்றார். அம்மா அப்பாவின் சப்போர்ட் மூலமாகத்தான் நாங்கள் இந்த அளவிற்கு வந்துள்ளோம். ஏனென்றால் படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி இரண்டிலும் எங்களுக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்திருக்கின்றார்கள். இதை செய்ய வேண்டாம் என்று ஒருநாளும் அவர்கள் கூறியதில்லை. மேலும் பினான்சியல் சப்போர்ட்டாக ஜிம்னாஸ்டிக் கோச் கருணாகரன்எங்களுக்கு மிகுந்த உதவி செய்தார்.
நேஷனல் லெவல் பார்ட்டிஸ்பண்ட்டாக இருக்கக்கூடிய நாங்கள், அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்பது எங்களின் கனவாக உள்ளது, மேலும் எங்களைப் போன்ற பல பேருக்கு இந்த ஜிம்னாஸ்டிக்கை கேமை சொல்லி தர வேண்டும் என்பதும் எங்களின் ஆசை என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Women's Day