Home /madurai /

கறி தோசைக்கு பிரபலமான மதுரை சிம்மக்கல் கோனார் கடை.. இந்த கடை ஏன் இத்தனை ஃபேமஸ்?

கறி தோசைக்கு பிரபலமான மதுரை சிம்மக்கல் கோனார் கடை.. இந்த கடை ஏன் இத்தனை ஃபேமஸ்?

மதுரை

மதுரை சிம்மக்கல் கோனார் கடை

Madurai Simmakkal Konar Kadai | மதுரையில் 80 வருட பாரம்பரியத்துடன் இயங்கி வரும் சிம்மக்கல் கோனார் கடையில் கிடைக்கும் கறி தோசை பிரசித்தி பெற்று விளங்குகிறது. இதற்கான காரணத்தை விளக்குகிறார் கடையின் உரிமையாளர்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை என்று சொன்னாலே கோயில்களின் நகரம் என்பார்கள்.  அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. கோவில்களுக்கு அடுத்தபடியாக மதுரைக்கு புகழ் தேடித்தருபவை இங்கு கிடைக்ககூடிய வகை வகையான உணவுகள் மற்றும் இங்குள்ள உணவகங்கள். மதுரையில் பல்வேறு உணவகங்கள் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில்   1943ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 79 ஆண்டுகளாக மதுரையில் இயங்கி வரும் பிரபல உணவகம் தான் சிம்மக்கல் கோனார் கடை.

மதுரையில் அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் கறி தோசையும் ஒன்று.. முட்டை மற்றும் சால்னா கலக்கபட்ட தோசை மாவின் மேல் மட்டன் அல்லது சிக்கன் கொண்டு நிரப்பப்பட்டு சுடப்படும் இந்த தோசையின் சுவைக்கு பலரும் அடிமை என்றே கூறலாம்..

மதுரை சிம்மக்கல் கோனார் கடை


அந்த வகையில் இன்று மதுரையின் மூலை முடுக்குகள் எங்கும் விற்கப்படும் இந்த கறி தோசை முதன் முதலில் தயார் செய்யப்ட்டு விற்பனை செய்யப்பட்டது இந்த சிம்மக்கல் கோனார் கடை உணவகத்தில் தான். இன்றும் மதுரையில் இவர்களது கறி தோசைக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தாத்தா, அப்பாவுக்கு அடுத்ததாக மூன்றாம் தலைமுறையாக இக்கடையை நிர்வகித்து வரும் உரிமையாளர் எஸ்.எம். ராஜேந்திரன் அவர்கள் பேசுகையில், இந்தக் கடை 1943 க்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்பொழுது எங்களிடம் 1943ல் இருந்து கடை இருந்ததற்கான சான்றுகள் மட்டுமே உள்ளது என தெரிவித்தார்.

தனது தாத்தா இந்த கடையை ஆரம்பிக்கும்போது கறி தோசை மட்டுமே இங்கு விற்பனை செய்யப்பட்டது, காலப்போக்கில் அனைத்து வகையான உணவுகளும் பரிமாறப்பட்டது, பெயர் இல்லாமலே தான் இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கோனார் கடை என்று மக்கள் தான் இந்த கடைக்கு பெயர்  கொடுத்ததாகவும் கூறினார்.

மதுரையில்  ருசித்து பார்க்கவேண்டிய உணவுகளில் மதுரை சிம்மக்கல் கோனார் கடை கறி தோசையும் ஒன்று என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை!!

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai, Restaurant

அடுத்த செய்தி