முகப்பு /மதுரை /

விஜய் சேதுபதி நடித்த 'சேதுபதி' படத்தை இங்க தான் ஷூட் பண்ணாங்களா? அதுவும் மதுரையில!

விஜய் சேதுபதி நடித்த 'சேதுபதி' படத்தை இங்க தான் ஷூட் பண்ணாங்களா? அதுவும் மதுரையில!

X
ஷூட்டிங்

ஷூட்டிங் ஸ்பாட்

Madurai shooting spot | மதுரையில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தையில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ஜெய், சசிகுமார் போன்ற நடிகர்கள் நடித்த படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை என்றாலே மதுரை மல்லி, மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் இவைதான் ஃபேமஸ் என்று நினைப்பீர்கள். ஆனால், மதுரையில் ஷூட்டிங் ஸ்பாட்டும் பேமஸானது. ஏனென்றால், மதுரையில் எக்கச்சக்கமான படங்களை ஷூட் பண்ணி இருக்காங்க. அப்படி பேமஸான சூட்டிங் ஸ்பாட்களில் ஒன்றுதான் மதுரை உலக தமிழ்ச் சங்கம் ரோடு பக்கத்தில் இருக்கும்ஞாயிற்றுக்கிழமை சந்தை.

இந்த சந்தையில் முழுக்க முழுக்க இரும்பு சாமான்கள் தான் இருக்கும். இது போக சின்ன சின்ன பானை கடை, மரக்கடை, மூலிகை கடைகளும்இருக்கும். இந்த இடத்தில்தான் விஜய் சேதுபதி நடித்தசேதுபதி படத்தோட ஃபைட்சீன் சூட்டிங் நடைபெற்றது.

அது என்ன சீன் தெரியுமா?விஜய் சேதுபதி இந்தப் படத்தில் போலீஸாக இருப்பார். ஒரு கேஸ்ல திருடன்களை பிடிக்க ஓடிட்டுஇருப்பார். அப்போபோலீஸ் எல்லோரும்சேர்ந்து திருடர்களை பிடிக்கிற மாதிரியான ஒரு சண்டை சீன்இந்த பிளேஸ்ல தான் எடுத்திருப்பாங்க. திருடனை பிடித்து தாறுமாறாகஅடிக்கிற சீனும், திருடனா அடிக்கும் போது கூட இருக்கிற ஒரு போலீஸையும் தெரியாம அடிச்சிடுவாரு அப்போது‘சார் நான் மட்டில இருக்கேன், திருடன் வந்தால் பிடிக்கிறேன் நீங்க போங்க சார்’ என்று விஜய் சேதுபதியிடம் இன்னொரு போலீஸ் சொல்ற சீனும் இந்த பகுதியில்தான் ஷூ பண்ணிருப்பாங்க.

இதேபோல, ஒரு கிரில் கேட்ல மாட்டிக்கிட்ட திருடன விஜய் சேதுபதியும் இன்னொரு போலீஸ் அதிகாரியும் அடிக்கிற மாதிரியான சீன்என்று அந்த ஃபைட் சீன் முழுவதும் இந்த இடங்களில்தான் எடுக்கப்பட்டன.

ஜிகர்தண்டா படத்தில் ‘டிங் டாங்’ அப்படின்னு ஒரு பாடல் இருக்கும் இந்த படத்துல பாபி சிம்ஹா ரவுடியாக இருப்பார். இந்த சாங்ல ஒரு சின்ன சீன்ல இந்தஞாயிற்றுக்கிழமை சந்தை பிளேஸ்ல நடந்து போற மாதிரியும் ரவுடியா இருக்கிற இவரு ஒருத்தர இரும்புனால அடிக்கிற மாதிரியான சீனையும் இங்குதான்எடுத்து இருப்பாங்க.

சுப்பிரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்யும், சசிகுமாரும்  பேசிக் கொண்டுவர மாதிரியான ஒரு குட்டி சீனையும் இந்த சண்டே மார்க்கெட்டில் தான் ஷூட்பண்ணிஇருப்பாங்க. இதேபோல, பல சீன்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Local News, Madurai, Shootin spot, Vijyay Sethupathi