முகப்பு /மதுரை /

மதுரையில் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றில் மீண்டும் கழிவு நீர் கலப்பு.. அதிர்ச்சியில் மக்கள்!

மதுரையில் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றில் மீண்டும் கழிவு நீர் கலப்பு.. அதிர்ச்சியில் மக்கள்!

X
வைகை

வைகை ஆற்றில் கழிவு நீர்

மதுரை சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கக்கூடிய ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் மீண்டும் கழிவு நீர் கலக்கின்றது. இதனை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் சித்திரை திருவிழரிவின்போதுகள்ளழகர் ஆற்றில்இறங்கும் பகுதியில்,வைகை ஆற்றில் மீண்டும் கழிவுநீர் கலக்கப்படுகின்றது.

மதுரையில் சித்திரை மாதம் வந்தாலே மதுரையின் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா ஆரம்பித்து விடும். பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர்திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்பாடு, கள்ளழகர் எழுந்தருளுதல் என பல்வேறு நிகழ்வுகள் சித்திரை திருவிழாவில் நடைபெறும்.

சித்திரை திருவிழாவில் முக்கியநிகழ்ச்சியானகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்நிகழ்வின்போது, பல்வேறு மாவட்டங்கள், பிறமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் எனபல லட்சம் மக்கள் வைகை ஆற்றுக்கு வருவது வழக்கம்.

இந்த நிகழ்வில் கள்ளழகர் வைகை ஆற்றில் நீராடியும் அழகர் தரிசனம் செய்ய வந்த மக்கள் மொட்டை அடித்து வைகை ஆற்றில் நீராடுவர்.இந்த நிலையில் கள்ளழகர் இறங்கக்கூடிய ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையோரம் மீண்டும் கழிவு நீர் கலக்கப்படுகின்றது.

மாநகராட்சி மூலமாக இந்த பகுதியில் மட்டும் கழிவு நீர் கலக்காத வகையில் பெரிய பெரிய குழாய்கள் மூலமாக கழிவு நீர் குழாய்கள் பதித்து,நடவடிக்கைஎடுக்கப்பட்ட நிலையில்,சரியான பராமரிப்புஇல்லாத காரணத்தினால், கள்ளழகர் இறங்கக்கூடிய இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டும் துர்நாற்றம் வீசி மீண்டும் வைகை ஆற்றோடு கழிவுநீர் கலக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு,சித்திரைத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. இந்த விழாநடைபெற இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அசுத்தமான நிலையில் இருக்கின்றனர்.

எனவே, இங்குகழுவு நீர் கலக்காத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

First published:

Tags: Kallazhagar, Local News, Madurai