ஹோம் /மதுரை /

பழம்பெருமை வாய்ந்த மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்...

பழம்பெருமை வாய்ந்த மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்...

மதுரை

மதுரை - கூடல் அழகர் பெருமாள் கோவில்

Madurai Koodal Azhagar Perumal Temple : மதுரை மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த கூடல் அழகர் பெருமாள் கோயில்.. இதன் சிறப்புகளை அறிவோம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

கூடலழகர் பெருமாள் கோயில் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில், மேற்கு வடம் போக்கித்தெருவில் அமைந்துள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் 4வது ஸ்தலம் இது. இக்கோயிலின் உள்ள மூலவர் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் "கூடலழகர்". இந்த பெருமாளுக்கு மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்ற பெயரும் உள்ளது.

5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் இந்த கோயிலில் உள்ளன.

கூடல் அழகர் பெருமாள் கோவில்

வேறு எந்த கோயிலிலும் இல்லாது இந்த கோயிலில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சியளிக்கிறார். அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.

சிறப்புகள்:

பழம்பெருமை வாய்ந்த இக்கோவில் சங்க காலத்துக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட கோவிலாகும். ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம்.

பெளர்ணமியன்று கிரிவலம் வருவது போல இந்த கோவிலில் விமானத்தை கிரிவலம் போன்று வலம் வந்து வழிபடுகின்றனர்...

பூஜை நேரம்:

கூடல் அழகர் பெருமாள் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.

கூடல் அழகர் பெருமாள் கோவில்

காலை 6 மணி - விஸ்வரூப பூஜை

காலை 8 மணி - கால சந்தி பூஜை

காலை 10 மணி - சுற்று கோவில் பூஜை

மதியம் 12 மணி - உச்சி கால பூஜை

மாலை 5 மணி - சாயரட்சை பூஜை

இரவு 7 மணி - சுற்று கோவில் பூஜை

இரவு 9 மணி - அர்த்தசாம பூஜை

விழாக்கள்:

கூடல் அழகர் பெருமாள் கோவிலில் தமிழ் மாதங்களான சித்திரை,, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள்.. இக்கோவிலை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்..

Madurai Koodal Alagar Temple Map
மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில்

Published by:Arun
First published:

Tags: Hindu Temple, Local News, Madurai