Home /madurai /

மதுரையில் மலிவு விலையில் புத்தகங்கள் வாங்கனுமா?

மதுரையில் மலிவு விலையில் புத்தகங்கள் வாங்கனுமா?

மதுரையில்

மதுரையில் மலிவு விலையில் புத்தகம் வாங்கனுமா?

Madurai District Latest News | மதுரை ரயில் நிலையம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டி தேர்வு மாணவர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் விற்கப்படும் புத்தகங்கள். இது குறித்த சிறப்பு தொகுப்பு..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரை ரயில் நிலையம் அருகில் புத்தக கடை வைத்து நடத்தி வருகின்றனர்  செந்தில் குமார் மற்றும் சந்திரன். 2002 முதல் சுமார் 20 ஆண்டுகளாக மதுரை ரயில் நிலைய வாசலில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களை மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் பாதி விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

முதன் முதலில் இந்த கடையை சந்திரன் என்பவர் தொடங்கும்போது மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத நிலையிலும் தற்போது ரயில் நிலையம் அருகில் உள்ள "செகண்ட் ஹேன்ட்" புத்தக கடை என்று கூறினால் தெரியாத மதுரை மக்கள் யாருமில்லை. இவர்களிடம் உபயோகிக்கபட்ட புத்தகங்கள் மட்டுமே விற்பணை செய்யப்படுகின்றன.   பாதி விலையில் புத்தகங்கள் கிடைப்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

இதையும் படிங்க:  பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

இங்கு  புத்தகங்கள் விற்பனை மட்டுமல்லாது வாடகை முறையிலும் கொடுக்கப்படுகிறது. அதன்படி புத்தகத்தை அதற்கான விலையை கொடுத்து நாம் எடுத்து செல்லலாம், அந்த புத்தகத்தை நாம் உபயோகித்த பின்னர் அதனை மீண்டும் ஒப்படைக்கும் பொழுது நாம் கட்டிய தொகையின் குறிப்பிட்ட அளவை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தெரு ஓரம் பிளாட்பாரத்தில் இந்த கடைகள் உள்ளதால் மழை நேரங்களில் இவர்களுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது எனவே இவ்வாறு உள்ள பிரச்சினைகளை சீர்செய்து உதவ வேண்டும் என்பது அரசுக்கு இவர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

மதுரை ரயில் நிலையம் அருகே இந்த கடைகளுக்கு ஒரு விசிட் அடித்து குறைந்த விலையில் புத்தகங்களை வாங்கி பயன் பெறலாமே.. புத்தகங்கள் குறித்து சந்தேகங்களுக்கு 9655678123 என்ற எண்ணில் செந்திலை தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி