ஹோம் /மதுரை /

முஸ்லீம் கைதிகள் மற்றும் எழுவர் விடுதலை - முதல்வருக்கு SDPIகட்சி கடித இயக்கம்! 

முஸ்லீம் கைதிகள் மற்றும் எழுவர் விடுதலை - முதல்வருக்கு SDPIகட்சி கடித இயக்கம்! 

முஸ்லீம் கைதிகள், ஏழுவர் விடுதலை - முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கடித இயக்கம்! 

முஸ்லீம் கைதிகள், ஏழுவர் விடுதலை - முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கடித இயக்கம்! 

Madurai |ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லை. அது தமிழக அரசின் கைகளில் மட்டுமே உள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  எஸ்டிபிஐ (SDPI) கட்சியின்மதுரை வடக்கு மாவட்டம், சார்பில் கடந்த பிப்ரவரி 25ம் தேதிதொடங்கி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கம்நடந்தது. இந்தக் கடிதங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

  முஸ்லிம் ஆயுள் கைதிகள் மற்றும் ஏழு தமிழர் ஆகியோரின் விடுதலை கோரி பொதுமக்கள் கூடுகிற முக்கிய இடங்களில் பெறப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனைத்தையும் தமிழக முதல்வருக்கு அனுப்பும் நிகழ்வு மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தபால் அலுவலகத்தில்எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நடந்தது.

  கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் தங்கள் கோரிக்கை தொடர்பாக கட்சியினர் விளக்கினர். 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், சட்டப்பிரிவு 161 படியும் உடனடியாக கருணையோடு விடுதலை செய்ய வேண்டும்.

  இதனை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக, கடந்த 25-ம் தேதி முதல் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதும் பிரச்சாரம் இயக்கம் நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் இந்த கோரிக்கையின் நியாயங்களை உணர்ந்து பாரபட்சமின்றி இந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லை. எனவே அது தமிழக அரசின் கைகளில் மட்டுமே உள்ளது என்பதால் பாரபட்சம் பாராமல் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

  மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும், ஏழு தமிழர்களுக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும். இவ்வாறு அந்த நிகழ்வில் கோரிக்கை எழுப்பப்பட்டது. கட்சியினர் முதல்வருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

  Published by:Arun
  First published:

  Tags: Madurai