முகப்பு /மதுரை /

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி - பார்வையிடும் பள்ளி மாணவர்கள்..

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி - பார்வையிடும் பள்ளி மாணவர்கள்..

X
மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Madurai American College | மதுரையில் மிகவும் பழமையான கல்லூரிகளில் ஒன்றான அமெரிக்கன் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று நடைபெற்று வருகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மிகவும் பழமையான கல்லூரிகளில் ஒன்றுதான் அமெரிக்கன் கல்லூரி. இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் படிக்கக்கூடிய கல்லூரி மாணவ, மாணவிகள் செய்த சயின்ஸ் ப்ராஜெக்ட் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இக்கண்காட்சியை பார்ப்பதற்காக மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் என ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் வந்திருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ப்ராஜெக்ட்களை கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்து விளக்கம் அளித்தனர். இதனை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

First published:

Tags: Local News, Madurai, Science