மதுரையில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கக்கூடிய இடம் தான் திருப்பரங்குன்றம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழக்கூடிய திருப்பரங்குன்றம், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தான் முருகப்பெருமானின் தெய்வானையை திருமணம் செய்து கொண்டஸ்தலமாக திகழ்கின்றது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலையடிவாரத்தில் அமைந்துள்ள இடம் தான் சரவணப் பொய்கை. இந்த பொய்கையில் உள்ள தீர்த்தத்தை எடுத்துதான் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வருகின்றார்கள். சரவணப் பொய்கையில் நீராடினால் பாவங்கள் நீங்க பெற்று விரும்பிய வரத்தைப் பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட புனிதத் தலமாககருதப்படும் சரவண பொய்கையில் சுற்றி உள்ள பகுதி மக்கள் துணி துவைக்கவும் குளிக்கவும் இத்தீர்த்ததை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மேலும் குப்பைகள், குளிக்க பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்பூ போன்ற ரசாயன பொருட்கள் தண்ணீரில் கலப்பதினால் தற்பொழுது உள்ள சரவணப் பொழுகை சுத்தம் இன்றி காணப்படுகின்றது.
இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறும் பொழுது, ‘முதலில் இப்பகுதியில் தெப்பம் ஒன்று இருந்தது. அந்த தெப்பத்தை தூர் வாராமல் மண் போட்டு மூடி விட்டார்கள் இப்பொழுது அது புழக்கத்தில் இல்லாத காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மக்கள் புனித ஸ்தலமான இத் தெப்பக் குளத்தில் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
ராமேஸ்வரத்தில் லெட்சுமணர் தீர்த்தத்தில் விமர்சையாக நடைபெற்ற தெப்பத்தேர் திருவிழா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai