ஹோம் /மதுரை /

மதுரை பொத்தானியபுரம் திடலில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.. திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்திய சிறுவர்கள்!

மதுரை பொத்தானியபுரம் திடலில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.. திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்திய சிறுவர்கள்!

X
மதுரை

மதுரை பொங்கல் கொண்டாட்டம்

Madurai pongal celebration | மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் மாமதுரை மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா என்ற தலைப்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் இன்று மாமதுரை மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை முஸ்லிம் கிறிஸ்டின் என மதங்களைக் கடந்து கொண்டாடப்படுவது என்பது வழக்கம். அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து மாமதுரை மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா 2023 என்ற தலைப்பில் பெரியவர்கள் சிறியவர்கள் என மக்கள் அனைவரும் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் மாலை நிகழ்வின் ஒரு பகுதியாக பெரியவர்களுக்கு கோலம் போட்டிகளும் சிறுவர்கள் இளைஞர்கள் என பலரும் சிலம்பாட்டம் ஒயிலாட்டம் பரதநாட்டியம் சுருள்வாள் சுற்றுதல் பறை இசை என பல்வேறு வகையான நிகழ்வுகளும் கலந்து கொண்டு சிறுவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி விழாவினை சிறப்பித்தனர்.

மேலும் விழாவின் இறுதியாக போட்டிகளில் கலந்து கொண்ட பெரியவர்கள், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவ சிறுமிகள் மற்றும் இளைஞர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை காண்பதற்கு எனவே திரளான மக்கள் இப்பகுதியில் திரண்டனர்

First published:

Tags: Local News, Madurai, Pongal festival