முகப்பு /மதுரை /

பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? - மதுரை சிம்மக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை..

பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? - மதுரை சிம்மக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை..

X
பலாப்பழம்

பலாப்பழம்

Jackfruit Sales In Madurai : கோடை காலத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Madurai, India

கோடைக்காலம் வந்தாலே பழங்களில் முக்கனி பழங்களான மா, பலா, வாழை பழங்களோடு சீசன் ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கடைகளில் பலாப்பழ சீசன்களை கட்ட தொடங்கியுள்ளது.  இந்த சீசனில் பலாப்பழத்திற்கென தனி மவுசு இருப்பதால் மக்கள் அனைவரும் பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவதினாலும், அதிகமாக வந்து வாங்கி செல்கின்றனர்.

பொதுவாகவே பலாப்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி தான் புதுக்கோட்டை பண்ருட்டி போன்ற பகுதிகள். இந்த காலத்தில் தான் இப்பகுதிகளில் பலாப்பழத்தின் விளைச்சல் அதிகமாகவும், சுவையாகவும் இருப்பதால் இங்குள்ள வியாபாரிகள் மொத்தமாக இறக்குமதி செய்கின்றனர்.

சிம்மக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கும் பலாப்பழ விற்பனை

பொதுவாகவே கிலோவிற்கு ஒரு நல்ல பலாப்பழத்தின் விலை 30-ல் இருந்து 40 வரைக்கும் விற்பனை செய்யப்படும்

இதுபோக வெயில் காலத்தில் மட்டும் கிடைக்கும் சுவையான பலாப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் பாக்டீரியா வைரஸ் தாக்காமலும், அல்சர் செரிமான கோளாறு, கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் இருக்கிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் சரவணன் கூறும்போது,  “விளைச்சல் அதிகமாக இருக்கக்கூடிய புதுக்கோட்டை, பண்ருட்டி போன்ற பகுதிகளில் இருந்துதான் பலாப்பழங்களை மொத்தமாக இறக்குமதி செய்கிறோம். பொதுவாக புதுக்கோட்டை, பண்ருட்டி, கேரளா போன்ற பகுதிகளிலிருந்து தான் பலாப்பழம் வரும். ஆனால் தற்போது கேரளாவில் விளையும் பலாப்பழத்தை விட புதுக்கோட்டை, பண்ருட்டி போன்ற பகுதிகள் விளையும் பலாப்பழம் சுவையாக இருக்கிறது.

இதனால் அப்பகுதியிலிருந்து வாங்கி வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம். சீசன் காலங்களில் மட்டும் தான் இந்த பலாப்பழம் கிடைப்பதில்லை. தற்போது அனைத்து நாட்களிலும் பலாப்பழம் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. ஆனால் இந்த சீசனில் மட்டும் தான் சற்று சுவை அதிகமாக இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் ஒரு கிலோ பலாப்பழத்தின் விலை 30-ல் இருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். ஒரு நல்ல பலாப்பழம் என்றால் விலை இவ்வளவு ரூபாய்க்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே சாதாரணமான பலாப்பழம்போதும் என்றால் 25 ரூபாய்க்கு கூட கிடைக்கும். ஆனால் அதில் தனியான சுவை இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று கூறினார்.

First published:

Tags: Local News, Madurai