முகப்பு /மதுரை /

மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai Metro Train | மதுரை மாநகரில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் திகழ்கிறது. சமீப காலமாக நகரின் வளர்ச்சிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மெட்ரோ

இந்நிலையில், மதுரையில் கூடுதல் அம்சமாக ஒத்தக்கடையையும், திருமங்கலத்தையும் இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதாவது திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுர காலேஜ், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்ட் வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

top videos

    அதன்படி, தமிழ்நாடு பட்ஜெடில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டார். அதில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்பும் இடம்பெற்றது. மதுரை நகரின் மையப் பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரயில் திட்டமானது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Madurai, Metro Rail, Metro Train