முகப்பு /செய்தி /மதுரை / மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு..

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு..

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai Metro Train : மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு 18 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிப்பை கடந்த பிப்ரவரி 18ம் தேதியன்று மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. இந்த டெண்டரில் பங்கேற்க 4 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், திட்ட அறிக்கையை ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்குள் தயாரிப்பதாக தெரிவித்ததால், ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிவகங்கையில் மற்றுமொரு கீழடியா? திருப்பாச்சேத்தி வைகை ஆற்றங்கரையோரம் உறைக்கிணறு கண்டுபிடிப்பு..!

top videos

    அதிகபட்சமாக மூன்றரை கோடி வரை டெண்டர் கோரப்பட்ட நிலையில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 96 ஆயிரத்து 600 ரூபாய்க்கு, ஆர்.வி. அசோசியேட் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. எனவே, விரைவில் மதுரை மக்களுக்கான போக்குவரத்து பயன்பாடு, நிலத்தேவை, வழித்தட அமைப்பு, மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Madurai, Metro Train